சில தினங்களாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எம்.லசந்த பண்டாரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் போதை வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், பாவமையாளர்களை அடையாளங்கண்டு கைது நடபடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக இப்பிரதேசத்திலுள்ள போதை வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன், பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் பெருந்தொகைப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பொலிஸாரின் இந்நடவடிக்கை பிரதேச மக்களிடத்தில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருவதுடன், எஞ்சியுள்ள போதை வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உச்சபட்ச தண்ட்ஃனை வழங்கப்பட வேண்டும். போதை வியாபாரத்தின் மூலம் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொர்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது.
அண்மைய தினங்களில் பிரதேசத்தின் பிரபல போதை வியாபாரி என அறியப்பட்ட பெண்ணொருவர் பெருந்தொகைப்ப்பணம், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக ஒரு சிலரும் தம்பதியரும் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment