"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" : வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் ஆதம்பாவா எம்.பி யினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!



நூருல் ஹுதா உமர்-
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று (13) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆசிக், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமைத்துவ தொழிநுட்பம் , மற்றும் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :