சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தி



சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுக்கே உரித்தான குழந்தைப் பருவ உலகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அரசியல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் தாம் முன்னுரிமையளிக்கவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் சுதந்திரத்திற்காகவும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தை தொனிப்பொருளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அதனை யதார்த்தமாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கும், இலவச மருத்துவ சேவைகளை உறுதி செய்வதற்கும் தமது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :