அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும்போதே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
21 வயதுக்குள் அடிப்படை (3S) தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைக்க வேண்டும். உற்பத்தி பொருளாதாரம், முயற்சியாண்மை, கடல்சார் நீரியல் வளங்கள், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இணைந்ததான திட்டங்களை உருவாக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் வளங்களை மையப்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், மாவட்ட வளங்களை பயன்படுத்தும் விதமாக கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குதல். வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல் போன்ற பல திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருக்கிறோம்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிர்வாக பயங்கரவாதம் மற்றும் காணி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சட்ட மற்றும் கல்வி பீடத்தினை ஆரம்பித்தல், அனைத்து மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைய கூடியவாறு மக்களுடன் தேவையுடைய அரசாங்க காரியாலயங்களான ஆட்பதிவு திணைக்கள காரியாலயம், குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் காரியாலயம் போன்றவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை கேந்திர நிலையங்களாக இருக்கின்ற அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இடங்களை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல். போன்ற பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை செய்ய எண்ணியுள்ளதாக இங்கு உரையாற்றிய சபீஸ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment