நமது பிரதேச பெண்கள் அமைப்புக்கள் தேர்தலில் களமிறங்குமாறு அழுத்தம் தருகின்றனர். - கலாநிதி உதுமான்கண்டு நாபீர்.ங்களது பிரதேசங்களில் அரசியல்வாதிகாளால் ஆற்றப்படவேண்டிய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவைகளை கொண்டுசெல்ல தன்னை அரசியலில் களமிறங்குமாறு அழுத்தம் அதருவதாக நாபீர் பவுண்டேஷனின் தலைவரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளருமான அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.

நாபீர் பவுண்டேஷனின் சாய்ந்தமருது பிரதேச சங்கங்களின் தலைவர்களுடனான விஷேட சந்திப்பு ஒன்று சாய்ந்தமருது 17 ஆம் பிரிவில் 2024.06.16 ஆம் திகதி இடம்பெற்றது.

அரசியல்வாதிகளுடாக ஆற்றப்படவேண்டிய மக்களால் எதிர்பார்க்கப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்லவேண்டிய அரசியவாதிகள், எங்களது பிரதேசங்களுக்கு சுற்றுலா அடிப்படையில் வருகிறார்கள் அவர்களின் கவர்ச்சியான வார்த்தைகளுக்கு எங்களது மக்கள் அடிமையாகி அவர்கள் கூறும் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள் அதனூடாக அவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள் மக்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். இவ்வாறான நிலை மாறவேண்டும் என்றும் தங்களுக்கு பொருத்தமான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பலம் மக்களிடமே உள்ளதாகவும் எதிர்காலத்தில் மக்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக பொறியலாளர் நாபீர் தெரிவித்தார்.

மக்கள் மாற்றான்தாய் நிலையில் பார்க்கப்படும் நிலை மாறவேண்டும் அரசியல் கட்சிகள் என்பது வேதமும் இல்லை. மக்கள் இப்போது யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள் தங்களது பிரச்சினைகளில் அக்கறையுள்ள தங்களது பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
நான், நமது பவுண்டேஷன் ஊடாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் இவ்வாறான நிலை நீடிக்க வேண்டும் என்னிடம் நமது மக்கள் எத்ர்பார்க்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன அவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள் அங்கீரம் எனக்குத் தேவை அவ்வாறு குறித்த அங்கீகாரம் கிடைக்குமாக இருந்தால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நமது இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்றும் இதற்கான நிதியை வெளிநாடுகளில் இருந்தும் தன்னால் கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது சங்கங்களில் தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :