வைத்திய சேவையை வழங்க வைத்தியர்களின் பங்களிப்புகள் மட்டும் போதாது!கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் இமாமுத்தீன் மெளலானா தெரிவிப்பு!


அபு அலா -

நோயாளர்களுக்கு சிறந்த வைத்திய சேவைகளை வழங்குவதாக இருந்தால் வைத்தியர்களின் பங்களிப்புகள் மட்டும் போதாது. அதற்கான வைத்திய உபகரணங்கள், மருந்துகள், ஆளணிகள் போன்ற பல தேவைகள் உள்ளதென கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் இமாமுத்தீன் மெளலானா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு உறுப்பினர்களின் நிர்வாகத் தெரிவும், முதலாவது நிர்வாக சபைக் கூட்டமும் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.வபா தலைமையில் (14) வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் சேவை மிகத் திறன்பட இயங்க வேண்டுமாக இருந்தால் அந்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் நல்லதாக இருக்க வேண்டும். அத்துடன் வைத்தியசாலை மீதான பார்வை மற்றும் தொடர்பாடல்கள் மிக அதிகமாக இருந்தால்தான் அந்த வைத்தியசாலையின் வைத்திய சேவைகளுடன் அபிவிருத்திகளும் சிறந்த முறையில் இடம்பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர்கள் சுகம் பெற்றவர்களாக, திருப்தியான முறையில் செல்லவேண்டும் என்பதே எமது எல்லோருடைய நோக்கமாக இருக்கவேண்டும் என்றார்.

வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் Nebulizer ஒன்று இல்லாமல் பாரிய சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம் என்று வைத்தியசாலை பொறுப்பதிகாரியினால் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டபோது ANF தனியார் மருத்துவ உபகரண விநியோக நிறைவேற்றுப் பணிப்பாளரும் அபிவிருத்திக் குழு உறுப்பினருமாகிய எ.எல்.எ.கபூர் உடனடியாக Nebulizer ஒன்றினை வழங்கி அக்குறைபாட்டை நிவர்த்தி செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு நிர்வாகத்தினர்.

தலைவராக வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.வபா நிறுவனத் தலைவர் என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக ஆசிரிய ஆலோசகர் எம்.எப்.முஹம்மது நழீர் தெரிவு செய்யப்பட்டார்.பொருளாளராக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹம்மது றியாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
உப செயலாளராக ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவு செய்யப்பட்டார். உறுப்பினர்களாக,

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவருமான ஏ.எச்.ஹனீஸ், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், அதிபரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.அஜ்மல், ANF தனியார் மருத்துவ உபகரண நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எ.எல்.எ.கபூர், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருந்துக் கலவையாளர் ஏ.எல்.முஹம்மட் புகாரி இலங்கை வங்கி அட்டாளைச்சேனை கிளையின் ஓய்வுபெற்ற முகாமையாளர் ஏ.சி.கியாஸ்டீன், மக்கள் வங்கி உத்தியோகத்தர் எம்.ஐ.முஹம்மது நபீல்,
ஏ.பி.தீனுல்லாஹ், ஓய்வுபெற்ற சமுக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.அன்வர், ஓய்வுபெற்ற கிராம சேவகர் எஸ்.எல்.ஏ.சமட், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் எம்.ஏ.றமீஸ், ஓய்வுபெற்ற எம்.ஏ.சிறாஜ் அஹமட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :