சுவாமி விபுலானந்தர் ஆண்டை முன்னிட்டு கணேஷா அறநெறி மாணவர்களின் விளையாட்டு விழாவி.ரி. சகாதேவராஜா-
ம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல அறநெறி பாட சாலைகளில் ஒன்றான திருக்கோவில், விநாயகபுரம் ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலை பிள்ளைகளின் பாரம்பரிய கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வு திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ கணேசா அறநெறி பாடசாலை நாடாத்திய இச் சித்திரை விளையாட்டு போட்டி நிகழ்வு சுவாமி விபுலா னந்தர் நூற்றாண்டு நினைவாக நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் பணிப்பாளர் கண.இராஜரத்தினம் ( கண்ணன்) மற்றும் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் சோ,ரவீந்திரன்,ஆசிரியர்களான ஜனா , தர்மசீலன் மற்றும் அறநெறி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :