ஓட்டமாவடி - மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளதாக பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்துள்ளது.
வருடம் இரு முறை நடைபெற்று வருகின்ற கண் சிகிச்சை முகாம் இம்முறையும் வழமை போன்று மீராவோடை எம், பீ, சீ எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் (5) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடாத்த நிருவாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதில், கண்களில் வெள்ளை படர்தல் நோயாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் அன்றைய தினம் வருகை தந்து பயன்பெறுமாறு பள்ளிவாசல் நிருவாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

0 comments :
Post a Comment