காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி திட்டத்தினை தடுப்பதற்கான சூழ்ச்சியா ?



லக வங்கியின் நிதியிலான இணைப்பாக்கம் உள்ளடங்கலான அபிவிருத்தி திட்டம்(Inclusive Connectivity and Development Project) ICDP கீழான காத்தான்குடி பூனச்சிமுனை பாலமுனை ஆகிய பிரதேச வீதி அபிவிருத்தி திட்டத்தினை தடுப்பதற்கான சூழ்ச்சியா ?

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்படி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகளின் தெரிவு இடம்பெற்றது.
அப்போதைய அமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமாகிய கௌரவ அல்ஹாபீஸ் நசீர் அகமத் அவர்களினால் காத்தான்குடி பூனச்சிமுனை பாலமுனை பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகளின் விபரங்கள் மேற்படி திட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 2023.02. 21 ஆம் தேதி இத்திட்டம் மற்றும் மட்டக்களப்பு RDA பொறியியலாளர்கள் குழுவினரால் இவ்விதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்வரும் வீதிகள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2023 03 09ஆம் தேதி மட்டக்களப்பு RDA பொறியியலாளர்களினால் இவ்வீதிகளுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்திகள் அக்காலப்பகுதியில் வலைத்தளங்களில் என்னால் வெளியிடப்பட்டிருந்தது.

1.அல் அக்ஸா வீதி. அல் அக்ஸா பள்ளியடியில் தொடங்கி பதுரியா வீதி, மஞ்சந்தொடுவாய் புதிய பாலமுனை வீதி ஊடாகச் சென்று பூனச்சிமுனை பச்சை வீட்டு திட்டத்தில் நிறைவுறும் - 2.75Km 13 கோடி 20 லட்சம்

2. டீன்விதி காத்தான்குடி பிரதான வீதியில் ஆரம்பித்து நதியா கடற்கரையை அடைந்து கடற்கரை வீதியுடாக சென்று கடற்கரை கான்கிரீட் வீதியில் நிறைவுறும் - 2.1Km தசம்17 கோடி 80 லட்சம்

3. கர்பலா பாலமுனை வீதி டீன் வீதிஅலியார் சந்தியில் ஆரம்பித்து கர்பலா வீதி ஊடாக சென்று பாலமுனை சந்தியில் நிறைவுறும் 2.2 Km 13 கோடி 80 லட்சம்

4.பெண் சந்தை வீதி இதில் மத்திய வீதி/பெண்சந்தை வீதி, இரண்டாம் குறுக்கு வீதி மொய்தீன் பள்ளிவாயல் மையவாடி வீதி என்பன உள்ளடங்கும் - 1.1Km 5 கோடியே 10 லட்சம்

இவ் வீதிகள் அனைத்தும் தேவையான இடங்களில் வீதியோர வடிகான் இடப்பட்டு காப்பட் விதிகளாக அபிவிருத்தி செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வீதிகள் அனைத்தும் ஒரே தொகுதியாக ICDP கொழும்புத் திட்ட அலுவலகத்தினால் கடந்த மார்ச் மாதம் தேசிய மட்ட திறந்த கேள்வி கோரப்பட்டு அதற்கு இணங்க விண்ணப்பித்த ஒப்பந்ததாரர்களில் குறைந்த விலையிட்ட ஈபேட் சன்ஸ் நிறுவனம் நிர்மாணத்துக்காக இம்மாதம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மேலும் இவ்விதிகளின் பொறுப்பினை இத்திட்ட அலுவலகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு அதற்கான கடிதங்கள் காத்தான்குடி நகர சபைக்கு பிரதியுடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2024 .05 .15 ஆம் தேதி திடீரென பொன் சந்தை வீதிக்கு (மத்திய வீதி) ABC. கலவை கொட்டப்பட்டு பரவப்பட்டுள்ளது இன்றும் அவ்வேலை தொடர்ந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நாம் விசாரித்த போது கடந்த 2022/23 காலத்தில் முடிவுறுத்தப்பட்ட IROAD திட்டத்தில் எஞ்சிய நிதியில் இவ்விதி வேலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ABC கலவை இடப்பட்டு வெறும் தார் மட்டும் இடப்பட உள்ளது பக்க வடிகானோ, காப்பட்டோ இடப்படப்போவதில்லை.

இத் திடீர் வீதி வேலை தொடர்பாக பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது

IROAD திட்டத்தில் இவ்வீதி கடந்த நல்லாட்சி அரசில் உள்ளடக்கப்பட்டு இருந்தும் தற்போது இத்திட்டம் முடிவுறுத்தப்பட்ட பின்னர் எவ்வாறு வேலை செய்வது.மேலும் IROAD திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த காத்தான்குடி, பூனச்சிமுனை பிரதேச வீதிகள் மட்டும் அதில் அபிவிருத்தி செய்யப்படாது மட்/ IROAD திட்ட அலுவலகத்தினால் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

உலக வங்கியின் ICDP திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு வடிகானுடன் காப்பாற்றும் இடப்பட உள்ளது
மேலும் காத்தான்குடியின் ICDP திட்ட வீதிகள் யாவும் ஒரே தொகுதியாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் இவ்விதி மட்டும் அரைகுறையாக அபிவிருத்தி செய்யப்பட்டால் ஏனைய வீதிகளின் அபிவிருத்தியும் தடைபடும் நிலை ஏற்படலாம்.

ஒட்டுமொத்தமாக நமது பிரதேசத்தின் வீதிகள் ICDP திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படுவதை தடுக்கும் ஒரு பாரிய சூழ்ச்சியாக இது காணப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்விதி மட்டும் அரைகுறையாக அபிவிருத்தி செய்யவதை உடன் தடுக்குமாறு காத்தான்குடி நகர சபைக்கு பலதர ப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் அவர்களால் இதுவரை காத்திரமான எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வேதனையான விடயமாகும்.

எனவே இவ் வீதிகளில் வாழும் மக்களும் ஊரின் பொது நிறுவனங்களும் இவ்விடத்தில் உடன் நடவடிக்கை எடுத்து இச் சூழ்ச்சியிலிருந்து நமது பிரதேச வீதிகளின் அபிவிருத்தியை பாதுகாக்க வேண்டியது
கடமையும் பொறுப்பும் என்பதை இவ்விதிகளின் அபிவிருத்திக்கென கௌரவ ஆளுநர் ஹாபீஸ் நசீர் அகமத் அவர்களுடன் இணைந்து செயல்பட்டவன் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கின்றேன்

M.Y.ஆதம் லெவ்வை
செயலாளர்
அல் பறகத் கிராமிய மீனவர் அமைப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :