நோயுற்றவர்களைக் கவனிப்பதற்காகவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற் காகவும் 1858 இல் தொடங்கப்பட்ட எமது சிவில் சுகாதார சேவை
1926 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் நோய் குணப்படுத்தும் சேவை, நோய் தடுப்பு சேவையிலிருந்து பிரிந்து தத்தமது துறைகளில் மட்டும் கவனம் செலுத்தி இன்று இரு துறைகளும் சர்வதேச தரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன.
இலங்கையில் பொது சுகாதார துறையானது 95% உள்நோயாளிகள் மற்றும் 50% வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையை வழங்குகிறது. தனியார் துறை வளர்ந்து வரும் முன்னிலையில் இருந்தாலும், அதிக செலவுகள் காரணமாக அவர்களின் சேவைகள் மக்கள் தொகையில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே கிடைக்கின்றன.
40 களில் ஏற்கனவே மத்திய மருந்தகங்கள் செயல்படும் பகுதிகளில் முடிந்தவரை மருத்துவமனைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டு கிராமப்புற மருத்துவமனைகள் கட்டுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது, ஆனால் யுத்தம் கடும் வரட்சி காரணமாக எதிர்பார்த்த அளவில் கட்டுமானப்பணிகள் நடைபெறாத போதும் அது பின்னர் முழுமையாக நடைமுறைக்கு வந்தது.
முன்னர் மத்திய அரசின் சுகாதார திணைக்களம் , படிநிலை வலையமைப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளான- மூன்றாம் நிலை நோய் குணப்படுத்தல் நிறுவனங்கள், பிரதேச வைத்திய நிறுவனங்களை கொண்ட இரண்டாம் நிலை பராமரிப்பு நிறுவனங்கள்,மற்றும் வெளிநோயாளர் பராமரிப்பை மட்டும் வழங்கும் முதன்மை மருத்துவப் பிரிவுகள் ஆகியவற்றால் ஒரு விரிவான அளவிலான சுகாதார சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
சுகாதார சேவைகளை திட்டமிட்டு வழங்கும் முக்கிய நிறுவன அமைப்பு சுகாதார சேவைகள் திணைக்களம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் உள்ளது. இது நோய் தடுப்பு, நோய் தீர்க்கும் மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு ஆகிய விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு முதன்மையான பொறுப்பாக உள்ளது .
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் முக்கிய செயல்பாடுகளில் கொள்கை வழிகாட்டுதல்களை அமைத்தல், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி, கற்பித்தல் மற்றும் சிறப்பு மருத்துவ நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் மருத்து விநியோகம் ஆகியவை சம்மந்தப்பட்ட துணை சுகாதார பணிப்பாளர் நாயகங்களின்(DDG) பொறுப்பை சார்ந்ததாகும் .
மேலும் தற்போது 1987 இல் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தைத் தொடர்ந்து மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு சுகாதார சேவை பகுதியளவில் பகிர்ந்துதளிக்கப்பட்டுள்ளது.இது மாகாணங்களில் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான இறுதிப் பொறுப்பை மாகாண சபைகளுக்கு ஒப்படைப்பதற்கு வழிவகுத்தது. இருந்தபோதும் இன்னும் சுகாதார அமைச்சகம் (MoH) கொள்கை உருவாக்கம் மற்றும் சுகாதார சட்டம், திட்ட கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வை, சுகாதார தொழில்நுட்பங்கள், மனித வளங்கள் மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் போன்ற செயல்பாடுகளுக்கு பொறுப்பாகவிருக்கிறது .
ஒன்பது மாகாண அமைச்சுகளின் கீழ் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சை மற்றும் தடுப்பு சேவைகள் செயல்படுகின்றன.
அமைப்பு மற்றும் நிர்வாகம்
ஒவ்வொரு மாகாண சபைக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்(PDHS) உள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மாகாண மட்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்குப் பொறுப்பானவர்களாக இருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கு மாவட்ட மட்டத்தில் பொறுப்பான பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் (DPDHS/RDHS ) மாகாண பணிப்பாளர்களுக்கு உதவுகின்றனர்.
மேலும் 1997 வாக்கில், 238 கோட்ட இயக்குனரகங்கள் (DDHS) நிறுவப்பட்டன. இது மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் உள்ள ஏனைய நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளின் ஒழுங்கமைப்பைக் கொண்டு வந்தது. சுகாதார சேவைகளின் பிரிவு இயக்குநர்கள் (DDHS) /MOH தடுப்பு சுகாதார சேவைகளுக்கும் MOH மட்ட நிர்வாக செயற்பாடுகளுக்கும் பொறுப்பாயிருந்தனர். இது DPDHS அவர்களின் நிர்வாக செயற் ப்பாட்டை சிக்கலாக்கியதால் 2005 இற்கு பின் இந்த நிர்வாக அமைப்பு முறை கைவிடப்பட்டு மாவட்ட மட்ட நிர்வாகம் முன் இருந்ததுபோல் கொண்டு வரப்பட்டு அவர்களின் பதவி பெயர் மீண்டும் RDHS என மாற்றப்பட்டது.
1992 இன் ஆரம்ப சுகாதார பராமரிப்பு (PHC) அடிப்படையிலான தேசிய சுகாதாரக் கொள்கை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (UHC) மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்திசெய்யுமுகமாக தற்பொழுது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2010 இற்கு பிறகு, முன்னர் இருந்த முதன்மை பராமரிப்பு நிலையைங்களான மத்திய மருந்தகம்(CD), மகப்பேற்று மருத்துவ மனை(CD &MH), கிராமிய வைத்தியசாலை(RH), சுற்றயல் கூறு வைத்தியசலைகள்(PU) அனைத்தும் கைவிடப்பட்டு மத்திய மருந்தகங்கள் PMCU ஆகவும் எனைய வைத்தியசாலைகள் பிரதேச வைத்தியசாலை தரம் C ஆகவும் பெயர் மாற்றம் பெற்றன.
இதேபோல முன்னர் மாவட்ட வைத்தியாசலைகளாக இருந்த , வைத்தியாசலைகள்அதன் மொத்த படுக்கைகளுக்கு அமைய பிரதேச வைத்தியாசலைகள் தரம் A அல்லது B ஆகவும் முன்னைய ஆதார வைத்தியசாலைகள் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை, மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் தாதிய உத்தியோகத்தினரின் எண்ணிக்கைக்கு அமைய தரம் A அல்லது B எனவும் ஏனைய மருத்துவமனைகள் மூன்றாம் நிலை (Tertiary Care)நோய் குணப்படுத்தல் நிறுவனங்களாகவும் தரப்படுத்தப்பட்டன.
மூன்றாம் நிலை( Tertiary care)
போதனா மருத்துவமனைகள்
நிபுணர்கள்-- 15-50
மருத்துவ அதிகாரிகள்-135-500
தாதியர்கள் -- 424-1100
மாகாண பொது மருத்துவமனைகள்
நிபுணர்கள்,---35-55
மருத்துவ அதிகாரிகள்-180-410
தாதியர்கள் ---575-1250
மாவட்ட பொது மருத்துவமனைகள்
நிபுணர்கள்,---10-20
மருத்துவ அதிகாரிகள்--70-150
தாதியர்கள் ----175-400
சிறப்பு வைத்தியசாலைகள்
நிபுணர்கள்,---10-30
மருத்துவ அதிகாரிகள்--100-300
தாதியர்கள் ----100-300
இரண்டாம் நிலை(Secondary care)
ஆதார வைத்தியசாலைகள்-A
நிபுணர்கள்,--03-11
மருத்துவ அதிகாரிகள்--45-100
தாதியர்கள் ----110-200
ஆதார வைத்தியசாலைகள்-B
நிபுணர்கள்----01-04
மருத்துவ அதிகாரிகள்-10-40
தாதியர்கள்----25-65
அந்தவகையில் எமது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை தரம் C ஆக காணப்படுகிறது. வைத்தியசாலைகளின் தற்போதைய வகைப்படுத்தல் பின்வருமாறு காணப்படுகிறது.
மூன்றாம் நிலை
போதனா மருத்துவமனைகள்
மாகாண பொது மருத்துவமனைகள்
மாவட்ட பொது மருத்துவமனைகள்
சிறப்பு மருத்துவமனைகள்
இரண்டாம் நிலை
ஆதார வைத்தியசாலை -தரம் A
ஆதார வைத்தியசாலை- தரம் B
முதன்மை நிலை
முதன்மை மருத்துவ பராமரிப்பு
அலகுகள் (PMCU)
பிரதேச வைத்தியசாலை -தரம் A
பிரதேச வைத்தியசாலை -தரம் B
பிரதேச வைத்தியசாலை -தரம் C.
தொடரும்....

0 comments :
Post a Comment