யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரியில் (2023) ஆம் கல்வியாண்டில் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர் கௌரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
புனித பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற சுமார் 25 மாணவர்கள் பழைய மாணவர் சங்கத்தினரால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பணமுடிச்சு வழங்கி கல்லூரிப் புனிதர் தினத்தில் ( St Patrick's Day)கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் பழைய மாணவர் சங்க கொடியை கல்லூரி அதிபரும் , யாழ்ப்பாண பழைய மாணவர் சங்க தலைவருமாகிய அருட்திரு ஏ.பி.திருமகன் அடிகளார் ஏற்றி வைத்தார்.முதல் நிகழ்வாக புதிதாக பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையே சிநேக பூர்வ T10 கிறிக்கெட் போட்டி நடைபெற்றது.

இவ் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள்,பெற்றோர்கள், கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவர், செயலாளர், மற்றும் கல்லூரியில் கற்று புலம்பெயர் தேசங்களில் இருந்து கல்லூரிக்கு வருகை தந்த பழைய மாணவர்கள் உட்பட பல பழைய மாணவர்கள் , கல்லூரி நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தினத்தில் யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தினர் முன்னெடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :