சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் அலுவலகம் காத்தான்குடியில் திறந்து வைப்பு

அஸ்ஹர் இப்றாஹிம்-

காத்தான்குடியினை தலைமையகமாக கொண்டு இயங்கும் தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் அலுவலகம் காத்தான்குடியில் (13) சனிக்கிழமை மாலை சேர் ராசிக் பரீட் மாவத்தையில் அமைந்துள்ள கிரசன்ட் கல்வி நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைப்பின் தலைவர் யூ.எல் எம்.என். முபீன் உட்பட பணிப்பாளர் சபை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அன்மையில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக மோசமாக பாதிப்படையச் செய்த வெள்ளப்பெருக்கு தொடர்பில் ஆராயப்பட்டது. இது விடயமாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்று திட்டங்கள் தயாரிப்பது தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.

இவ்வேலைத் திட்டத்தினை பொறியியல் துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனையினைப் பெற்று முழுமையான திட்டம் ஒன்றை தயாரிப்பதெனவும் கல்வி, சுகாதாரம், மற்றும் காணி உரிமைகள், இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் வகிபாகம் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டு அதற்கு தேவையான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.என். முபீன் இதன் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :