கல்முனை மாநகரில் சீனா இலங்கை பட்டுபாதை திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்




எம்.எம்.றம்ஸீன்-
சீனா இலங்கை பட்டுபாதை திட்டத்தின் ஊடாக இலங்கை அரசு அடைந்து கொண்ட நன்மைகள் மற்றும் இதன் விளைவுகள் என்ன என்பது தொடர்பான மாபெரும் கலந்துரையாடல் கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதி மண்டபத்தில் அதற்கான ஏஸியா புரோக்கிரஸ் போரத்தின் ஏற்பாட்டாளரும் பிரபல வர்த்தகர் மற்றும் சமூக சேவையாளருமானர மஹ்மூத் மாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த சர்வதேச மதங்களையும் சேர்ந்த இளம் கல்வியாளர்கள் , சமூக சேவையாளர்கள் , அரசியல்வாதிகள் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் முக்கியமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் சீனாவினுடைய பட்டு பாதை திட்டத்தின் ஊடாக இலங்கை பெற்றுக்கொண்ட திட்டங்கள் அவை எவ்வாறு பயன்படுகிறது இலங்கை பெற்று கொண்ட கடன்களின் அளவு சீனாவிலிருந்து இருந்து பெற்றுக்கொண்ட கடன்களின் அளவு தனி நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அளவு ஏனைய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட அளவுகள் போன்ற முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களது திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் அந்த திட்டங்கள் தற்போது எவ்வாறு அமைந்திருக்கின்றது அதன் வெற்றி பாதை எப்படி அமைய வேண்டும் ஒரு நாட்டின் முன்னேற்றம் எப்படி அமைய வேண்டும் ஒரு நாட்டை முன்னேற்றுவது எவ்வாறு என்பது தொடர்பான பழ விடயங்கள் மற்றும் தொழினுட்பம் கல்வி விவசாயம் சுகாதாரம் சார்ந்த அனைத்து துறைகளையும் உள்வாங்கியதாக இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :