அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அலி ஸாஹிர் மௌலானா தனது ஏறாவூர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இருந்த தனது ஆதரவாளர் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன் பிரார்த்தனை நிகழ்விலும் பங்கேற்றார்-
இதன்போது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் , அல்லல்படும் பலஸ்தீன முஸ்லிம்களது விமோசனத்திற்கும் அமைதி நிலை நாட்டப்படவும் விசேட துஆ பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது .
இதன்போது முன்னாள் நகர சபை தவிசாளர் நழீம் ஹாஜி , நகர சபையின் செயலாளர் ஹமீம் உட்பட முக்கியஸ்த்தர்கள், உலமாக்கள் , ஆதரவு செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment