மாற்று திறனாளிகள் மற்றும் பெண் தலமை தாங்கும் குடும்ப பயனாளிகளுக்கான மூன்று நாள் வாழை மடல் மூலமான உற்பத்தி பொருட்களுக்கான பயிற்சி வகுப்புஏறாவூர் சாதிக் அகமட்-
சுற்று சூழல் அமைப்புகள், மற்றும் பாதுகாப்பான வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கான சமூக அடிப்படையிலான அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு CBID நடைமுறைகள் எனும் திட்டத்திற்கமைய

இன்று YMCA நிறுவனத்தினர் CBM நிதி வழங்குனரின் அனுசரணையில் தன்னாமுனை மியானி மண்டபத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் பெண் தலமை தாங்கும் குடும்ப பயனாளிகளுக்கான மூன்று நாள் வாழை மடல் மூலமான உற்பத்தி பொருட்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் YMCA. நிறுவனத்தின் பிரதி பொது செயலாளர் திரு பற்றிக், திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கெளசிகன்,அரச உத்தியோகத்தர்களாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. அருள்மொழி ,ஏறாவூர் விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரசாந்தி, மற்றும் மாவட்ட செயலக. சுற்றுலா அபிவிருத்தி உத்தியோகத்தர் விவேகானந்த ராஜா ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் நஜுமுதீன் போன்றோர் அதிதிகளாக வரவேற்கப்பட்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

அதிதிகளின் ஆக்கபூர்வமான பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கான உரையாற்றல்களை தொடர்ந்து மதிய போசணத்துடன் இனிதே நிறைவுற்றது. தொடந்து பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :