தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் மொழித்துறையும் தஞ்சாவூர்ப் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய "பன்முக நோக்கில் தமிழியல்" எனும் சிறப்புரை நிகழ்வு 2023.10.31 ஆம் திகதி கலை கலாசார பீட அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.
தொடக்கவுரையை சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் வாழ்த்துரையை பேராசிரியர் சி. தியாகராஜன் அவர்களும் அறிமுகவுரையை பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் அவர்களும் நிகழ்த்தினர்.
நிகழ்வினை விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் நெறிப்படுத்தியிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். ஜெயசீலனின் நன்றியுரையோடு நிகழ்வின் முதல் அங்கம் நிறைவு பெற்றது.
இரண்டாம் அங்கமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர், கலை கலாசார பீடாதிபதி, மொழித்துறைத் தலைவர், மொழித்துறை பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இவ்விரு பல்கலைக்கழகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற உயர்கல்வித் தொடர்புகளும் பரிமாற்றங்களும் பற்றிய ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்றதோடு துணைவேந்தர் றமீஸ் அபூபக்கர், பீடாதிபதி எம்.எம். பாஸில், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment