உலக சமாதான நிகழ்வையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவின மக்களும் பங்கேற்ற நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லக சமாதான தினத்தையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் சமாதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

உலக சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக சமாதான தினத்தில் கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே சர்வதேச சமாதான நிறுவனமும், ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து
குறித்த நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் சகல இனங்களினதும் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
சமாதான தினத்தையிட்டி முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மிகவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் 180 பேருக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாணவர்களை மகிழ்விப்பதற்கான இராணுவத்தினரின் இசை நிகழ்வும் விருந்துபசாரமும் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்),புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந் முல்லைத்தீவு இராணுவ பாதுகாப்பு தலைமையக பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜெயவர்த்தன கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலாளர், துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் முப் படை அதிகாரிகள் ,பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், சர்வமத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் குறைத்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :