தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ட்ரோன் தொழி நுட்பத்தை புவியியல் ஆய்வுகளில் பிரயோகிப்பது தொடர்பான பயிற்சி...!



எம்.என்.எம். அப்ராஸ்-
லங்கை கிழக்கு பல்கலைக்கழக புவியியற்துறை விஷேட மாணவர்களுக்கு ட்ரோன் தொழிநுட்பத்தை புவியியல் ஆய்வுகளில் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்
கலை,கலாசார பீடத்தின் புவியியற்துறைத்தலைவர் கே.நிஜாமிர் தலைமையில் (27)வியாழனன்று கலைகலாசார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில்,புவியியற்துறை பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல்,கலாநிதி எஸ்.றபீக்கா அமீர்தீன்,எம்.எல்.எப்.அமீர்,மற்றும் ஏனைய புவியியற்துறை விரிவுரையாளர்களும்,சிரேஷ்ட உதவி பதிவாளர் உட்பட கிழக்கு பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர்களும்,புவியியற்துறை விஷேடதுறை மாணவர்கள் ஆகியோர் இதன் போது கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் விஷேட உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் பல்கலைக்கழகம் சமூக மற்றும் பிராந்திய ரீதியில் ஆற்றும் பங்களிப்பினை எடுத்துரைத்து பீடத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கினார்.

மேலும் இதன் போது புவியியற்துறைத்தலைவர் கே.நிஜாமிர் ட்ரோன் தொழி நுட்பத்தின் அபார வளர்ச்சி மற்றும் புவியியற்துறையில் கற்றல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக ட்ரோன் தொழினுட்ப பிரயோகம் அதன் எதிர்கால பயன்பாட்டு நிலை பற்றி எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து பேராசிரியர் கலீல் அவர்களின் விரிவுரை இடம்பெற்றதோடு ட்ரோன் தொழி நுட்ப பிரயோகம் பற்றி விரிவுரை மற்றும் களப்பயிற்சி போன்றன இடம்பெற்றன.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :