உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - சாரதி பலிக.கிஷாந்தன்-
த்தனை மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று (29.07.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கீழ்பிரிவிலிருந்து தோட்ட தொழிற்சாலைக்கு தேயிலைக் கொழுந்தையும், விறகையும் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் மலையில் பாதையில் மத்திய பிரிவு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் மவுண்ட்வேர்ணன் தோட்டத்தைச் சேர்ந்த சாரதியான எட்வட் (வயது - 48) 3 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாரதியின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :