ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது வருடாந்த மாநாடு


அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது வருடாந்த மாநாடு மர்ஹூம் கலைவாதி கலீல் அரங்கில் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் கொழும்பு 10 தாபலக கேட்போர் கூடத்தில் 25.06.2023. நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மலேசியா மற்றும் மாலைதீவுக்கான உயர் ஸ்தானிகர் பத்லி ஹிசாம் ஆதம் அவர்கள் கலந்து கொண்டார்கள். சிறப்பு பேச்சாளராக களனி பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் தெல்கஹவத்தே ராஜ்குமார் சோம தேவ அவர்கள் இலங்கையில் முஸ்லிம்களது வரலாறு பற்றி பேசினார்.
இந் நிகழ்வில் தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவா இராமசாமி, சுதந்திர ஊடக இயக்கத்தின் காலம்சென்ற கமல் லியனாரச்சி, ஊடகத்துறை சிங்கள இலத்திரனியல் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜாவித் முனவ்வர், இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பாளர் சியாமா யாக்கூப், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நுார்தீன், மற்றும் இலங்கை இந்திய ஊடக ஏற்பாட்டாளர் இந்திய மணிச்சுடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சாஹூல் ஹமீத் ஆகியோர்களும் பிரதம அதிதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2023-24ஆம் ஆண்டுக்கு புதிய தலைவராக என்..எம். அமீன், செயலாளராக சிஹார் அனீஸ், பொருளாளராக கல்முனை ஜெஸ்மின், மற்றும் 14 நிறைவேற்று உறுப்பிணர்கதெரிபு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :