இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 125 வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (31) வெள்ளிக்கிழமை பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேசத்தில் காயத்ரி கிராமத்தில் சமுக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக் கட்சி பிரமுகருமான கே.நந்தபாலு தலைமையில் நடைபெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
பொத்துவில் தமிழரசுக்கட்சி அமைப்பாளர் கலாநேசன் , கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தந்தை செல்வாவின் திரு உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தவிசாளரும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.
0 comments :
Post a Comment