தேசிய ரீதியிலான தரம் 01 மாணவர்களுக்கான புதுமுக புகுவிழா (வித்தியாரம்ப விழா) நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
அதிபரின் ஆரம்ப உரையை தொடர்ந்து உதவிக் கல்வி பணிப்பாளரின் உரை இடம்பெற்றது.
விழாவில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து அதிதிகளும், கிரீடங்கள் மலர் மாலைகள் சூடி மாணவர்களும் வரவேற்கப்பட்டனர்.
கௌரவ அதிதிகளாக முன்னாள் அதிபர் சீ.பாலசிங்கன், பழைய மாணவர் சங்க பொருளாளர் பி.சசேந்திரா ஆசிரியர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதி அதிபர் ந.வன்னியசிங்கம் ஆசிரியர் திருமதி எம்.ஆர்.குமாரராசா, திருமதி விஜயபிருந்தா பிரதீபன், திருமதி வி. சிவப்பிரியா, என்.கோடீஸ்வரன் மற்றும் தரம் 1 மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment