உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும்



அபு அலா -
ள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.
ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் ஜப்பான் நாட்டின் பீஸ் வெயின்ட் அரச சார்பாற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவு இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகவும், ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திக்கூடங்களை பிரதம அதிதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டார். திருகோணமலை மாவட்டத்தில் மிகச் சிறந்த முறையில் சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல விளைச்சலைப்பெற்ற உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களுடன் நினைவுச் சின்னங்களை ஆளுநர் மற்றும் ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு ஆகியோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :