பிரான்ஸ் - ஜரோப்பிய நாடுகளிலிருந்து 700க்கும் அதிகமான இளம் பெண்களை சகாச விளையாட்டு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஸ்ரீலங்கா எயார் லைன் ஊடாக இலங்கைக்கு 2023 மார்ச் 19ஆம் திகதி அழைத்து வரவுள்ளனர். இவர்கள் இலங்கையில் 10 நாட்கள் தங்கியிருப்பார்கள். இலங்கையில்; இரண்டாவது முறையாகவும் இச் சகாசப் பந்தயமான அமேசன்ஸ் நிகழ்ச்சித் திட்டம் கண்டி பிரதேசத்தில் நடைபெறுகின்றது. என எயார் லைன் நிறைவேற்றுப் பணிப்பாளர் றிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.
மேற்படி விடயமாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக நேற்று 14ஆம் திகதி பி.எம்.ஜ.சி.எச். ல் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடைபெற்றது.
இவ் ஊடக மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர், உள்ளுர் பிரயாண ஏற்பாடுகள் நிறுவனத்தின் பணிப்பாளர், அமேசன்ஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் உலக பணிப்பாளர், எயார்லைன்ஸ் சந்தைப்படுத்தல் முகாமையாளர் எயார்லைன்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் றிச்சர்ட் நட்டாலும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த எயார்லைன் விமானத்தின் நிறைவேற்று அதிகாரி
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் உலகில் காணப்படும் ஒரேயொரு பயணப் பெண்களுக்கான சகாசப் பந்தயமான ரெய்ட் அமோசனஸ் ஜ வழங்கும் பங்காளியாக இரண்டாவது ஆண்டாகவும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கு களம் அமைக்கின்றது.
தொடர்ந்து உலக அமோசன்ஸ் பணிப்பாளர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் கடந்தகாலங்களில் இலங்கையில் ஏற்பட்ட கொவிட் 19, மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளால் இத் திட்டத்தினை இரண்டாவது முறையாகவும் இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இங்கு மக்களின் அன்பும், இங்குள்ள இயற்கை வளங்கள் , எழில் கொஞ்சும் சுவாத்தியமான காலநிலையும் எம்மைக் கவர்ந்துள்ளது. அத்துடன் இலங்கைக்கென தனியான விமானங்களும் உள்ளதால் இலங்கையை இரண்டவது முறையும் தேர்ந்தெடுத்தோம். இதற்காக இலங்கை நாட்டில் விமானம் டிக்கட், கோட்டேல் விசா செலுத்தல் போன்ற பல்வேறு துறையில் இலங்கை நன்மையடைகின்றது.
ரெய்ட் அமோசன்ஸ் என்பது பிரான்ஸில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட விரும்பத்தக்க சுற்றுலாத் தளங்களில் நிகழ்த்தப்படும் ஒரு வருடாந்த சாகச நிகழ்வாக இருக்கின்றது.
இதில் பெண் விளையாட்டு வீராங்கனைகள் மலைச் சைக்களோட்டம், சவாரி செய்தல், ஓடுதல், நடைபயிலுதல், மற்றும் அம்பெய்தல், போன்ற பல்வேறு சவால்களில் போட்டியிடுகின்றனர்
இலங்கை மக்களின் இணையற்ற அரவனைப்பு மற்றும் வெற்றிகரமாக நிகழ்வினை நடத்துவதற்காக அவர்களது ஆதரவு என்பன காரணமாக குறித்து நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் பேட்டி நிலவும் பல்வேறு தளங்களுக்கு மத்தியில் இலங்கை தெரிவு செய்யப்பட்டது. அவர்களின் முடிவு சர்வதேச சுற்றுலாத்துறைக்கான ஆதரவு தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியான சர்ந்தர்ப்பங்களில் பிரபல்யமான விமானப் போக்குவரத்துப பாதையை பாதுகாப்பதற்கான விமான நிறுவனத்தின் அயராத சந்தைப்படுத்தல் முயற்சிகளிலும் தங்கியுள்ளது.
இப்பாதையின் 21வது பதிப்பின்போது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி பீடபூமி வழியாக நடைப்பயணம் மேற்கொள்ளபபடும். வேளையில் இயற்கை மற்றும் வரலாற்று சிறப்பம்சங்களை கொண்ட வாசைனகளை மலர்ப்பாதிவுடன் பங்கேற்பாளர்கள் இணைந்து கொள்ள முடியும். ஏவ்வாறாயினும் ரெய்ட் அமேசன்ஸ் 2023 இல் அர்ப்பணம் செய்யப்பட்ட தனித்து அடையாளத்துடன் விமானத்தில் பாரிசிலிருந்து - கொழும்புக்கு பயணம் செய்வதற்காக ஸ்ரீலாங்கன் எயார்லைஸில் நிகழ்வின் உத்தியோகபூர்வ தரையைக் கையாலும் பங்குதாரரான கொலைன்ஸ் டி செலான் உடன் இணைந்து பிரான்ஸிய குழுவானது இலங்கையின் விருந்தோம்பலில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்யும்.
ஸ்ரீலங்கா எயரர்லைன்ஸ் 2023இல் பாரிஸூக்கு விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தவுடனேயே ரெய்ட் அமேசன்ஸ் உடன் இணைந்து கொண்டது. இந்த ஆண்டின் 21வது பதிப்பில் இருந்து உலகளவியல் 10 மில்லியன் யூரோ மதிப்புள்ள விளம்பரத்தினை ஸ்ரீலஙகா விமான நிறுவனமும் ; பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும். ஏன எயார்லைன் விமான சந்தைப்படுத்தல் முகாமையளர்; தெரிவித்தார்
0 comments :
Post a Comment