பெப்ரவரி 08ல் திகதி கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி



அஷ்ரப் ஏ சமத்-
இலங்கை சுதந்திர தொழிலாளர்கள் சங்கம் தொழிலாளர்களை; இணைத்துக் கொண்டு பெப்ரவரி 08ஆம் திகதி கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தேசபந்து லெஸ்லி தேவேந்திரா தெரிவித்தார்

மேற்கண்டவாறு இலங்கைத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தலைமையில் ராஜகிரியவில் உள்ள தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமைக் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே செயலாளர் தெரிவித்தார்.
இவ் ஊடக மாநாட்டில் லேக் ஹவுஸ் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் அனுர கொடகாந்த. எயார்லங்கா, ஜகத் விஜேவர்த்தன. பெற்றோலியம். இலங்கை மின்சார சபை, நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை, போன்ற அரச நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் ,செயலாளர்களும் இவ் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்
.
தொடர்ந்து கருத்து தெரிவித்த செயலாளர் லெஸ்லி தேவாநந்தா ..

இலங்கையில் தற்போதைய காலகட்டத்தில் என்றுமில்லாதவாறு பொது மக்கள் மீது பாரிய வரிகளை அரசாங்கம் சுமத்தியுள்ளது. இதனை மக்கள் தாங்கிக் கொள்ளாத அளவுக்கு சொல்லொன்னாத் துண்பங்;களையும் அவலங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
மின்சார சபை தமது வாடிக்கையாளர்கள் மீது நூற்றுக்கு 70 வீத்திலிருந்து 200 வீதம் வரை மின்சாரக் கட்டனத்தினை அதிகரித்துள்ளது. அதேபோன்றுதான் நீர்விநியோகம், பெற்றோலியம், சமயல் எரிவாயு போன்ற அத்தியவசியப் பொருட்களுக்கும் நாளுக்கு நாள் வறியைக் அதிகரித்து விலைகளையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இந்த நாட்டில் அன்றாடம் வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிiலையத்தில் எமது நாட்டு விமானங்கள் வேறு ஒரு நாட்டுக்கு சென்று பிரயாணிகளை ஏற்றிக் கொள்ளமுடியாதவாறு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் வேறு நாட்டு விமானங்கள் எமது நாட்டு பிரயாணிகளை எந்த வித வரியும் இன்றி ஏற்றிச் செல்கின்றது. இதனால் பாரிய விமானப் பயணங்களை வேறு நாடுகளுக்கு தாரை வாத்துக் கொடுத்துள்ளதால் எமக்கு பாரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சார சபையை பல்வேறு நாடுகளுக்கும் விற்று அதனை அவர்கள் எதிர்பார்த்த இலபத்தினைப் பெற்றுக் கொள்ளவே பாரிய மின்சார பாவனை அதிகரிப்பினை மக்கள் தலைமீது சுமத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு ஓய்வு பெற்ற இரண்டு பொதுமுகாமையாளர்கள் இருவர் ஆலோசகர்களாக உள்ளனர். இவர்கள் மாதாந்தம் 6 இலட்சம் ருபா சம்பளம் பெறுகின்றனர்.பதவி ஆகவேதான் தொழிற்சங்கங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கே ஒன்றினையவுள்ளளோம். இந்த நாட்டில் உள்ள சகல அதிகார சபைகள், கூட்டுத்;தாபணங்களது சுதந்திர தொழிலாளர்கள் சங்கங்கள் பெப்ரவரி 08ஆம் திகதி புறக்கோட்டையில் பாரிய தொழிற்சங்க போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் தொழிற்சங்க பிரநிதிகள் கருத:துத் தெரிவித்தனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :