ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 70 வயதுடையவர் 9 கிராமும் 850 மில்லி கிராமும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் ,
அவரது அடையாள மற்றும் தண்டனைத் தீர்ப்புக்காக நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் போது இவருக்கு ஒருவருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத் தண்டனை7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் ருபா 10 000.00 தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment