பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவிற்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவசர கடிதம்.



எஸ்.அஷ்ரப்கான்-
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் எண்ணிக்கையை ஆறிலிருந்து நான்காக குறைத்துள்ளமையை ஏற்க முடியாது என்றும் சாய்ந்தமருதுக்கு தொடர்ந்தும் ஆறு வட்டாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது,

அதிக வாக்காளர்களையும், அதிக சனத்தொகையையும் கொண்ட சாய்ந்தமருத்துக்கு 04 வட்டாரங்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 06 வட்டாரங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

பொலிவேரியன் கிராமத்தை தனியான வட்டாரமாக பிரிக்கவேண்டிய தேவை உள்ள காலகட்டத்தில் இப்படி வட்டாரங்களை சுருங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கல்முனையில் 05 வட்டாரங்களும், இஸ்லாமாபாத்தை தனி வட்டரமாகவும் நிர்ணயித்துள்ளமை போன்று சாய்ந்தமருத்துக்கான வட்டாரங்களும் 06ஆக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :