சம்மாந்துறை Police Cricket Fiesta வெற்றிக்கிண்னத்தை GAFSO அணி சுவீகரித்தது.சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
லங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156ஆவது நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் கிரிக்கெட் பெஸ்டா கிரிக்கெட் சுற்றிப்போட்டி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் சம்மாந்துறை கப்சோவின் அனுசரணையுடன் நேற்று(04) சம்மாந்துறை தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இச் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை பொலிஸ் அணி,சம்மாந்துறை பிரதேச செயலக அணி ,சம்மாந்துறை பிரதேச சபை அணி, தேசிய பாடசாலை அணி,கப்சோ அணி,சம்மாந்துறை ஆதார வைத்திய சாலை அணி என சுமார் 6 அணிகள் கலந்துகொண்டது.
இச் சுற்றின் இறுதிச்சுற்றுப்போட்டி சம்மாந்துறை பொலிஸ் அணிக்கும் சம்மாந்துறை கப்சோ அணிக்கும் இடையே நடை பெற்றது.

இறுதிச்சுற்றுப்போட்டியில் 6 ஓவர்கள் ஒர் ஓவரில் 6 பந்துகள் மொத்தமாக 36 பந்து வீச்சுக்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை கப்சோ அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் வெற்றி இழக்காக சம்மாந்துறை பொலிஸ் அணிக்கு 87 ஓட்டங்கள் வெற்றியிழக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட்,சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தகர் கே.பி சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சுற்றுப்போட்டியை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் பலர் திரண்டிருந்தனர்.
துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை பொலிஸ் அணி 06 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்டுக்களை இழந்து 61 ஓட்டங்களை பெற்றது.
சம்மாந்துறை கப்சோ அணி 26 ஓட்டங்களினால் வெற்றியை தமதாக்கி கொண்டது.
இத் தொடரில் வெற்றியீட்டிய சம்மாந்துறை கப்சோ அணிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டதோடு சம்மாந்துறை பொலிஸ் அணிக்கும் வெற்றிக்கிண்னம் வழங்கப்பட்டதுடன் இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணியினருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இத் தொடரின் இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக கப்சோ அணி வீரர் ஜே.எம் றிகாஸ் அவர்களும்,தொடரின் ஆட்ட நாயகனாக பொலிஸ் அணி வீரர் முபாரிஸ் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :