கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இலங்கையின் கரையோர பிரதேசங்களனூடாக சைக்கிளில் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர்.





அஸ்ஹர் இப்றாஹிம்-

“Ocean biome “அமைப்பின் கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கி செயல் படுத்தும் நோக்கில் இலங்கையை சுற்றி வரும் மட்டக்களப்பு பிரதேச இளைஞர்களான பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமார சிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன் ஆகியோர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
தமது நல்ல செயற்பாடுகள் எங்கோ ஏதோ ஒரு வழியில் பொதுமக்களைை சென்றடையும் என்பதும் அதனூடாக நிகழும் மாற்றங்களுமே அதற்கு சான்று .
சைக்கிள் ஓட்டிகளின் செயற்பாடுகளினால் தூண்டப்பட்டவர்களில் இந்த இரு இளைஞர்களும் அடங்குவர்.

சைக்கிளில் நாட்டின் கரையோர மாவட்டங்களில் குறிக்கோளோடு சுற்றிவர புறப்பட்டிருக்கும் இரு இளைஞர்களின் குறிக்கோள் நிச்சயம் வெற்றியடையும்.
இரண்டு சைக்கிள் ஓட்டிகளும் 11 நாட்கள் கொண்ட நீண்ட சைக்கிள் சவாரியை ஓசோன் ரைட் எனும் கருப்பொருளில் பயணிக்கிறார்கள் .இப்பயணத்தின் நோக்கமானது கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கடலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கடல் வளங்களை கையாளும்போது பொறுப்பை உருவாக்குவதற்கும் நாட்டின் கரையோர மாவட்டங்களை சுற்றி வருகின்ற சைக்கிள் ஓட்ட சவாரி கடலும் கடல் சார்ந்த இடங்களையும் நேசிக்கின்ற இளைஞர் யுவதிகள் வெளிநாட்டவர் என 300க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் மட்டக்களப்பை மையப்படுத்தி இயங்கி வரும் “Ocean biome எனும் தனியார் தன்னார்வு நிறுவனம் திறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கடல்சார் கல்வி அறிவு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மிக அழுத்தமான சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற பல்வேறு திட்டங்களை கொண்டு நமது அடுத்த தலைமுறையை கடல்நீர் சார் நேயமிக்க சமூகமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அவற்றை வெற்றி கொள்வதற்காக கல்வி ,தொழில்நுட்பம் , ஆராய்ச்சி மற்றும் வணிகம் எனும் பெரும் 4 துறைகளின் ஊடாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது .


கடல் சுற்றுப்புற சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு சேவைத் திட்டங்களை உருவாக்கி அவற்றை வாரம் , மாதம் , வருடம் என மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.
அறக்கட்டளைகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடையே பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் உதவியோடு கடலோர சுற்றுப்புற அமைப்புகளை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்க்க இயற்கை அடிப்படையிலான தீவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கங்களை மாணவர்கள் மத்தியில் தெளிவு படுத்துவதினூடாகவும் நாமும் எதிர்கொள்ளும் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதிர்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றான கடல் குப்பைகள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ஆகும். இவை நம் ஆரோக்கியத்திற்கு சுத்தமான கடலை நம்பி இருக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்பதை மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு ஊடாகவும் பிளாஸ்டிக் ( Plastic awareness ) தெளிவு படுத்தி வருகின்றது .

பாடசாலை மாணவ மாணவிகள் பாடசாலை சூழலில் காணப்படுகின்ற குப்பைகளை சேகரித்து அவற்றை வேறுபடுத்தி உக்கக்கூடிய , உக்க முடியாத குப்பைகள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை வழங்குவதோடு மைக்ரோ பிளாஸ்டிக் (Micro plastic ) நம்பமுடியாத அளவிற்கு நுணுக்கமாக இருந்தாலும் அவைகள் உயிர்கள் மற்றும் சூழலில் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்களிடையே நிருபிப்பதன் மூலமாகவும் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றது.

போயா தினங்களில் பிளாஸ்டிக் அற்ற போயா தினம் ( plastic free poya Day ) தலைப்பில் கடல் மற்றும் கடலை அண்டிய பிரதேசங்களில் அதனை அண்டி வாழும் மக்களின் உதவியோடு பிளாஸ்டிக்குகள் அதுதொடர்பான குப்பைகளை சேகரித்து அதன் மூலம் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை தொடராக செய்து வருகின்றது.
இவை மட்டுமல்லாது கடல் வளங்களை பாதுகாப்பதற்காக மிகப் பாரிய வேலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது .இந்த அமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் ஒன்றுதான் இந்த இரு இளைஞர்களாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ” “ Ocean ride “ சைக்கிள் சவாரியாகும்.
இலங்கையின் கரையோர மாவட்டங்களான மட்டக்களப்பு ,திருகோணமலை ,முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம், புத்தளம் ,நீர்கொழும்பு ,கிக்கடுவை ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மீண்டும் மட்டக்களப்பை வந்தடையும் இப்பயணம் மொத்தம் 1,300 கிலோ மீட்டர்கள் 11 நாட்கள் கொண்டதாகும்..

அனாமிகன் எருவில் குமாரசிங்கம் சுமீத்திரா தம்பதிகளின் புதல்வரும் , சஞ்ஜீவன் மட்டக்களப்பு அமலநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் புதல்வருமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :