உகந்தை மலை முருகன் ஆலயத்தில் ஆடிவேல்திருவிழா தீர்த்தம் நாளைவியாழனன்று



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலயத்தில் ஆடி வேல் விழா உற்சவ திருவிழாப் பூசைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

நாளை 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆடி வேல் விழா தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபை வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உகந்தை மலை முருகன் ஆலய பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் திருவிழாபூஜைகளை நடாத்திவருகிறார். உதவியாக உதவிக்குழு கோபி சர்மா இயங்கி வருகிறார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஏற்பாட்டில் ஆலய நடைமுறைகள் கண்காணிக்க பட்டு வருகிறது.
வரலாறு காணாத வகையில் இம்முறை 29654 அடியார்கள் காட்டுப் பாதை வழியாக கதிர்காமம் பாதயாத்திரை சென்றுள்ளனர்.

முதல் தடவையாக இந்து சமய கலாசார முறைப்படி
கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டமை தெரிந்ததே.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக காட்டுப் பாதை திறக்கப்படவில்லை என்பதும் தெரிந்ததே.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :