திருகோணமலையில் நான்கு முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட் சமர் ஆரம்பம்.



வி.ரி.சகாதேவராஜா-
திருகோணமலையில் நான்கு முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சமர் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

பிரதம விருந்தினராக எமது வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் கலந்து சிறப்பித்தார்.
50 ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியானது இந்துக்கல்லூரி பழைய மாணவனும், இந்துக்கல்லூரி கிரிக்கெட் குழுவின் முன்னைநாள் தலைவருமான மறைந்த பிரபாகரன் திலக்‌ஷனின் ஞாபகார்த்தமாக அவரது நண்பர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இச்சுற்றுப் போட்டியின் முதல்போட்டியில் நேற்று (21.08.2022) இந்துக்கல்லூரியை எதிர்த்து விவேகானந்தா கல்லூரி விளையாடியது.

இரண்டாவது போட்டிஎதிர்வரும் 26.08.2022 (வெள்ளி) நடைபெறும். அன்று சென்.ஜோசப் கல்லூரியை எதிர்த்து விபுலானந்தா கல்லூரி விளையாடவுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் 28.08.2022 (ஞாயிறு) அன்று விளையாடவுள்ளனர்.

இப்போட்டிகள் யாவும் இந்துக்கல்லூரி மைதானத்திலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :