பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக சனிக்கிழமை (20) இரவு வழங்கி வைத்தார்.இவ்விளையாட்டு சீருடைகளை கண்ணன்வேல் , இ.வி.ராசா ,கர்ணா ,மற்றும் ராஜ் ஆகியோரின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் இருக்கின்றன ஆனால் அந்த திறமைகளை சரியாக இனங்கண்டு அவற்றை செயற்படுத்த இவ்வாறான ஊக்குவிப்பு செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இவ்விளையாட்டு துறையில் சிறப்பாக வரவேண்டுமாக இருந்தால் உங்கள் பயிற்சியினை திறம்படச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும்.அவ்வாறு செயற்படுவதன் ஊடாக உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடிவதுடன் பிரதேசத்தின் பெயரையும் சர்வதேசம் வரை எடுத்துச்செல்ல முடியும் என இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் இதன் போது குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :