கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பிரதேசத்தில் எட்டு வருடங்கள் கிராம உத்தியோகத்தராக சேவை புரிந்த எம்.எம்.அன்வர் சாதாத்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், குறித்த பகுதிக்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள கிராம உத்தியோகத்தர் எச்.எம்.அமானுல்லாஹ்வை வரவேற்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (5) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
செம்மண்ணோடை பள்ளிவாயல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ரீ.அப்துல் ரகுமான் அஸ்ஹரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி, ஒன்றியத்தின் ஆலோசகரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகத்தினர், புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment