பொறளை அஹதிய்யா மற்றும் இஸ்லாமிக் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த 36வது இஸ்லாமிய புது வருடமான முஹர்ரம் நிகழ்வு


ஏ.எஸ்..எம்.ஜாவித்-
பொறளை அஹதிய்யா மற்றும் இஸ்லாமிக் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த 36வது இஸ்லாமிய புது வருடமான முஹர்ரம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெமடகொட YMMA தலைமைக் காரியாலயத்தில் அஹதிய்யாவின் அதிபர் சிப்லி ஹாசிம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டிருந்தார், கௌரவ அதிதிகளாக பொரல அஹதிய்யாவின் பொருலாளர் அலவி முக்கதார்இ இளைஞர் பாராளுமன்ற பிரதி அமைச்சர் அஹமத் சித்தீக்இ மௌலவி மபாஸ்இ முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விஷேட முஹர்ரம் உரையை மௌலவி மபாஸ் வழங்கியதுடன் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வுகளும் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் வருமாணம் குறைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் அஹதிய்யாவின் ஏற்பாட்டில் அதிதிகளால் வழங்கி வைக்கபட்டது.
இதன்போது மாணவர்களின் பேச்சு, ஹஸீதா, இஸ்லாமிய கீத நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் அதிதிகளுக்கு அஹதிய்யாவின் அதிபரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அஹதிய்யாவின் பிரதி அதிபரும் ஊடகவியலாளருமான ருசைக் பாறுக் மற்றும் ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். ஜாவித் ஆகியோருரக்கு அஹதிய்யாவுக்கு பங்களிப்புச் செய்தமைக்காக நினைவுச் சின்னம்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :