சுவாமி விவேகானந்தரின் இலங்கை வருகையின் 125 வது ஆண்டு விழா .வி.ரி. சகாதேவராஜா-
லகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி, வங்கத்தின் சிங்கம் சுவாமி விவேகானந்தரின் ஈழத்திருநாட்டுக்கான வருகையின் 125 வது ஆண்டு நிறைவு விழா, கல்லடி விவேகானந்த மகளிர் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில், கல்லடி ராமகிருஷ்ண ஆக்கிரமத்திலுள்ள ராமகிருஷ்ண திருக்கோயிலில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அங்கிருந்து சுவாமி விவேகானந்தரின் திரு உருவப்படம் தாங்கிய அலங்கார ஊர்தி ஊர்வலமாக பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டது.

பாடசாலையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது .

அங்கு ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் சிறப்பு சொற்பொழிவையும் ,உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் விசேட உரையினையும் நிகழ்த்தி இருந்தார்கள்.

மாணவர்களின் பேச்சும் கலை நிகழ்ச்சிகளும் இடையிடையே நடைபெற்றன.
சுவாமி விவேகானந்தரின் இலங்கை வருகையின் போதான காட்சிகள் காணொளியில் காண்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :