யாழ் .கதிர்காமம் பாதயாத்திரை ஒரு மாத காலம் பூர்த்தி.! இன்று கல்லடி ராமகிருஷ்ணமிஷனில்..வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு இன்றுடன் ஒரு மாத காலத்தை பூர்த்தி செய்கின்றார்கள் ..
கடந்த மாதம் நான்காம் தேதி யாழ். செல்வச் சன்னதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா தலைமையிலே ஆரம்பமான பாதயாத்திரை குழுவினர் நேற்றைய தினம்(4) மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தார்கள்.

குழுவினர் இன்று( 5) செவ்வாய்க்கிழமை ஒரு மாத காலத்தை பூர்த்தி செய்கிறார்கள்.
இன்று , ராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு மாநில பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ், உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று இன்று அங்கு அவர்கள் விஜயம் செய்கிறார்கள்.

யாழ்.கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் இன்று பகல் கல்லடி இ.கி.மிஷனில் வரவேற்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு மதியபோசன விருந்து உபசாரம் அளிக்கப்பட இருக்கின்றது.

தலைவர் சி.ஜெய ராசா தெரிவிக்கையில்..

வரலாற்றில் முதல் தடவையாக மிஷனுக்கு செல்வது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எங்களில் 99 வீதமானவருக்கு மிஷின் பற்றி தெரியாது. ஆகவே எங்களை அன்புடன் அழைத்த சுவாமிகளுக்கு நன்றி கூறுகின்றோம். அதற்காக ஒருங்கிணைப்பைச் செய்த எமது ஆலோசகர் சகாதேவராஜா ஜயாவுக்கும் நன்றிகள்.

இன்னும் 3 தினங்களில் நாங்கள் அம்பாறை மாவட்டத்தை அடைவோம் .
22 ஆம் தேதி உகந்தைமலை முருகன் அருகில் உள்ள காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் அதன் ஊடாக காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றோம். முருகன் அருளால் எதிர்வரும் 28 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைய இருக்கின்றோம். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :