கல்முனை பிராந்திய மாணவர்களின் நலன் கருதி "Smart Students" செயற்றிட்டம் ஆரம்பிப்பு !



நூருல் ஹுதா உமர்-

கல்முனை பிராந்திய மாணவர்களின் நலன் கருதி கல்முனை அஸ்டோ அமைப்பினால் ஆளுமையுள்ள மாணவர் தேசம் என்ற தூரநோக்குடன் மாணவர்களுக்கு பயந்தரக்கூடிய வகையில் Smart Students என்ற புதிய செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் உளவியல் வழிகாட்டல்கள், தலைமத்துவ பயிற்சி முகாம்கள், ஆளுமை விருத்தியை மையப்படுத்திய செயற்திட்டங்கள், திறமையாளர்களை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டுவருதல், ஆத்மீக வழிகாட்டல், முதலுதவி பயிற்சி முகாம்கள், மாதந்தோறும் தபாலில் சன்மார்க்க மற்றும் அறிவியல் துணுக்குகள், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு பயிற்சி, தகவல் தொழினுட்ப வழிகாட்டல்கள், இயற்கை மருத்துவம் சார்ந்த கருத்தரங்குகள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள், சிங்கள மற்றும் ஆங்கில மொழி விருத்தி வகுப்புக்கள், Zoom செயலியில் மாதம் இரு முறை பல்துறை விற்பன்னர்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் ஆய்வரங்குகள், கற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் மற்றும் வழிகாட்டல்கள், நூலக சேவை உட்பட இன்னும் பல ஆக்கபூர்வமானதும் மனித வாழ்வியலுக்கு அவசியமானதுமான சேவைகளை இலவசமாக வழங்க உள்ளனர்.

கல்முனை பிரதேச செயலகத்தின் ஒரு கிராம சேவை பிரிவுக்கு 20 மாணவர்கள் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படுவர். இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்படிவத்தினை கல்முனை செய்லான் வீதியில் அமைந்திருக்கும் அஸ்டோ நூலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் மேலதிக விபரங்களை 0767256889 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமென்று கல்முனை அஸ்டோ அமையம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :