பெற்றோல் வரிசை ஊரை கடந்து சென்றது!எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஓட்டமாவடி பிரதேசத்தையும் தாண்டி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது.

குறித்த எரிபொருள் நிலையத்தில் நேற்று (19) பெற்றோல் விநியோகிக்கப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட பொதுமக்கள் நேற்றுமுன்தினம் மாலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
பெற்றோலுக்காக காத்து நிற்கும் இந்த வரிசை வாழைச்சேனையிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் தாண்டி ஓட்டமாவடி வரை நீண்டு சென்றது.

எனினும், பெற்றோல் விநியோகிக்கப்படாமல் டோக்கன்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :