ஓந்தாச்சிமடம் வட பத்திரகாளி அம்பாள் ஆலய சக்தி விழா.காரைதீவு சகா-
ந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ச்சியாக எட்டு தினங்கள் பூசைகள் இடம்பெற்று, ஜூலை மாதம் ஆறாம் தேதி(06.07.2022) புதன்கிழமை காலை தீமிதிப்பு சடங்கு நடைபெறவிருக்கிறது.

இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இரவு ஆறு மணிக்கு அம்பாள் எழுந்தருளச்செய்யும் நிகழ்வு இடம்பெறும். அதே வேளை இரவு பத்தரை மணி அளவிலே அம்பாளின் தேவஸ்தான திருக்கதவு திறக்கும் நிகழ்வு இடம்பெறும்.

ஏழு நாட்களும் காலை 7 மணிக்கு காலை பூஜை நண்பகல் பூசை 12 மணிக்கும் இரவு பூசை 5 மணிக்கும் இடம்பெற இருக்கின்றது .

மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வீர கம்பம் வெட்டு நிகழ்வும், வாழைக்காய் எழுந்தருளச் செய்யும் நிகழ்வும் இடம்பெறும்.
யூலை4ஆம் தேதி அம்பாள் முத்து சப்பரத்தில் வீதி வலம் வர இருக்கிறார்.

ஐந்தாம் நோர்ப்பு நெல் குற்றும் நிகழ்வு இடம்பெற்று ,சக்தி பூஜையும் இடம்பெற்று தீ மூட்டுதல் நிகழ்வும் இடம்பெறும்.

யூலை 6 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு தீமிதிப்பு சடங்கு இடம்பெறும். அதைத்தொடர்ந்து வாழி பாடும் நிகழ்வும் இடம்பெறும் .

சக்தி விழா காலங்களில் தினமும் பகல் பூசை தொடர்ந்து அன்னதானம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

சடங்கு பூஜை யாவும் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய பிரதமகுரு அருட் கலைத்திலகம் விஸ்வப்பிரம்மஸ்ரீ செ.சற்குணராஜா உதயன் குருக்கள் தலைமையில் இடம்பெற இருக்கின்றது .

தீமிதிப்பு வைபவம் யூலை 6 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணிக்கு இடம்பெறும் என்று ஸ்ரீ அரசடி விநாயகர் தேவஸ்தானம், ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் ,ஸ்ரீ முருகன் ஆலயங்களின் பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :