சர்வதேச குத்துஸ் தினமும் ரமழானை முன்னிட்டு நடாத்தப்பட்ட வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் மீராவோடை மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.
மீராவோடை மன்பஉல்ஹுதா அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச குத்ஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்ற சொற்பொழிவினை மௌலவி அல்ஹாபிழ் எம்.யூ.எம். ஸபீர் நிகழ்த்தினார். ரமழான் மாதத்தினுடைய இறுதி வெள்ளிக்கிழமையை சர்வதேச குத்துஸ் தினமாக ஈரான் இஸ்லாமிய புரட்சியினுடைய இஸ்தாபகர் இமாம் கொமைனி ரம்மதுல்லா அறிவித்திருந்தார்.
ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் நலன் மற்றும் விடுதலை வேண்டியும் உலக மக்களின் அமைதிக்காகவும் விசேட துவா பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
0 comments :
Post a Comment