மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையில் (0/L) தின விழா



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் (0/L) தின விழா நேற்று முன்தினம் (19) பாடசாலையின் மருதூர்க் கொத்தன் கலையரங்கத்தில் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் எம்.ரி.ஏ.பௌமி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக பாடசாலையின் பழைய மாணவியும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் (speech and language pathologist) கலந்து கொண்டார். விசேட அதிதியாக அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் அதிபர் எம்.எல். முஹம்மட் மஹ்றூப் கலந்து கொண்டார்.

பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் O/L தினத்தை முன்னிட்டு ''எழுகதிர்" எனும் சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஐ.சம்சுதீன், அல்-ஹாஜ் எம்.பி.ஏ. ராஜி, உதவி அதிபர்களான திருமதி ஏ.ஆர்.என். மன்பூஸா, எச்.எம்.நியாஸ், மற்றும் எம். எஸ்.பைலுல் ரஹ்மான், எம்.எஸ்.எம்.கியாஸ், ஈ.கமால்தீன் உட்பட பகுதி தலைவர்கள், தரம் 11 மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், விடுகை வருட மாணவர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :