கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி, மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா ஆகியோருடன் ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ். எம். வை. செனவிரத்ன , அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் , கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி ,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் ,கல்முனை ஸ்ரீ சுபத்திரா விகாராதிபதி ரன்முதுகல தேரர் , கல்முனை மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ,கடற்படை அதிகாரிகள் , பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

அத்துடன் இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்களின் ஆசிர்வாத சொற்பொழிவு இடம்பெற்றதுடன் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவினை மௌலவி ஏ.ஆர்..எம். சுபைர் நளிமி மேற்கொண்டார்.

இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் நன்றி உரையினை சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட்மேற்கொண்டார்.

பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கிருந்த மக்களிடம் சிநேக பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அதிதிகளான கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா , அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ். எம். வை. செனவிரத்ன , அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க ஆகியோரக்கு சிங்கள மொழிமூல திரு குர்ஆன் பிரதிகள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :