கொழும்பில் உள்ள பங்களதேஸ் உயா் ஸ்தானிகா் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் நேற்று (28) வருடாந்த இப்தாா் நோன்பு திறக்கும் வைபவத்தினை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தாா். இந் நிகழ்வில் 15 நாடுகளின் துாதுவா்கள் உயா்ஸ்தானிகள் கலந்து கொண்டனா். இந்தியா, கனடா, பாக்கிஸ்தான், மலேசியா, பலஸ்தீன், இந்தோணிசியா போன்ற நாடுகளின் துாதுவா்கள் கலந்து கொண்டனா். பாராளுமன்ற உறுப்பிணா்களான பைசால் காசீம், முஜிபு ரஹ்மான், வை.எம்.எம்.ஏ தலைவா் சஹிட் றிஸ்மி, என்.எம். அமீன், மொஹமட் ரசூல்டீன், ஜம்மியத்துல் உலமா பிரநிதிகளும் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளா் அக்ரம் நுாராமித் விசேட உரை நிகழ்த்தினாா். அவரதுரையில் இங்கு சகல 15க்கும் மேற்பட்ட நாடுகளின் துாதுவா்கள் உயா்ஸதாணிகள் சமூகம் தந்துள்ளீா்கள். இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினைக்கு மனிதபிமான உதவிகளை வழங்குமாறும் நோன்பு காலத்தில் கஸ்டப்படுவா்களுக்கு உதவுவதை இஸ்லாம் மாக்கம் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. நமது அண்டை நாடுகள் இத் தருத்தில் இலஙகையின் பொருளாதார வளா்ச்சிக்கு தம்மால் முடிந்தளவு உதவுமாறும் வேண்டிக் கொண்டாா்.
0 comments :
Post a Comment