சாதனை வீரர் சுல்பிகார் அவர்களை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய தனி நபர் சைக்கிள் சவாரியை எட்டுநாட்களுக்குள் (1407KM) வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கையின் பெருமை, சாதனை வீரர் சுல்பிகார் அவர்களை வரவேற்கும் சிறப்பு நிகழ்வு ஜே.ஜே.பெளண்டேசன் ஏற்பாட்டில், பிரபல தொழிலதிபர்,சமூக சேவகர் கலாநிதி ஜ.வை.எம் ..அனீப் தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தனது சைக்களில் சவாரியை ஆரம்பித்து மன்னாா், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை , பொத்துவில் அம்பாறை ஹம்பாந்தோட்டை வழியாக பெப்ரவரி 19ஆம் திகதி மீண்டும் சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தாா். இவரது இச் சாதனை பாரட்டி அதே தினத்தில் கொழும்பில் பொத்துவில் அஸ்மின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் யூ.எல் யாக்கூப்,சிரேஸ்ட அறிவிப்பாளர், சட்டத்தரணி,கவிஞர் ஏயெம் தாஜ்,சிரேஸ்ட அறிவிப்பாளர் "மனித நேயன்" இர்சாத் ஏ காதர்,பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையாளர் சுல்பிகார் குறித்து பாராட்டி பேசினர்.
ஜே.ஜே. பவுண்டேசன் பணிப்பாளர் கலாநிதி அனீப் சாதனை வீரர் சுல்பிகாருக்கு நினைவு சின்னம் வழங்கி, பொன்னாடை போற்றி கெளரவித்தார்.
0 comments :
Post a Comment