கல்குடா தேர்தல் தொகுதிக்கான பிரதான சுதந்திர தின விழா ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்றது.
சர்வமத அனுஷ்டானத்துடன் ஆரம்பமான இவ்விழாவில் அரசாங்க மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
சமூக செயற்பாட்டாளர் கலாநிதி எம்பி. முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதேச செயலாளர் கே. தவராசா, மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் , பிரதேச பொலிஸ் உதவி அத்தியட்சகர், கல்குடா , வாழைச்சேனை, சந்திவெளி மற்றும் ஏறாவூர் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர் என்எம். சியாம் மற்றும் வர்த்தக சங்கத்தலைவர் சீஎஸ்எம். மக்கீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பொலிஸ் நிலையங்களுக்கு தென்னங்கன்றுகள் கையளிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment