தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்; பொதுநூலகர் பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழக நூலகம்; சமூக நலத் திட்டத்தின் கீழ் (Community outreach programme) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தற்கால நவீன சவால்களை எதிர்நோக்கக்கூடிய வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கவேண்டுமென்ற நோக்கில்; ஒரு நாள் வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்றினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் அவர்களின் பணிப்புரையின் பேரில், பல்கலைக்கழக நூலகர் எம் எம் றிபாயுடீன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது எதிர்வரும் வியாழக்கிழமை (17. 2 .2022 ) பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நூலகர் எம் .எம் றிபாயுடீன் தலைமையில் நடைபெறும் இவ்வலுவூட்டல் ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும் பல்கலைக்கழக நூலகர் மற்றும் சிரேஷ்ட உதவி நூலகர்கள் இதில் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளார். 




Media Unit
Office of the Librarian
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :