ஓல்ட்டன் கிங்கோரா டிவிசனில் குடியிருயின் மீது இடிந்து வீழ்ந்த பாதுகாப்பு மதில் சுவர் - மூவர் காயம்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓல்டன் பிரிவில் குடியிருப்பு ஒன்றில் பாதுகாப்பு மதில் இடிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மழை பெய்து வந்த நிலையில் திடீரென ஓல்ட்டன் கிங்கோரா பிரிவிலுள்ள குடியிருப்பொன்றின் மீது 13/02 மாலை 04.30 மணியளவில் குடியிருப்பின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் குடியிருப்பிலிருந்த 60 வயதுடைய முதியவர் அவருடை மகள் மற்றும் இரண்டு வயதுடைய பேரப்பிள்ளை என மூவர் காயமுற்ற 'நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேலை காயமுற்ற மூவரில் முதியவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் தாயும் இரண்டு வயதுடைய மகனும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு மதில் இடிந்து வீழ்ந்துள்ளதையடுத்து அதற்கு மேல் அமைந்துள்ள குடியிருப்பும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளதாக குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :