தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மூன்றாவது வருடாந்த ஒன்றுகூடல்!



தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மூன்றாவது வருடாந்த ஒன்றுகூடல், கடந்த ஜனவரி, 25 ஆம் திகதி பல்கலைக்கழக ஊழியர் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் கலந்து கொண்டதுடன் பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வின் விஷேட அதிதியாக பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சியும் பீடாதிதிபதிகளான பேராசிரியர் எம்.எம்.பாஸில், கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் கலாநிதி யு.எல்.அப்துல் மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்கள் ஆற்றவேண்டிய பங்குகள் குறித்தும் ஊழியர்களை இன்னும் வினைத்திறன் மிக்கவர்களாக பயிற்றுவிப்பதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக 2022/2023 ஆம் ஆண்டுக்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புதிய தலைவராக சி.எம்.அஹமட் முனாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

ஏனைய நிர்வாகிகள்

செயலாளர்: எம்.ஏ.சி.எம்.ஸிராஜ்

பொருளாளர்: ஏ.எல்.ஜாபீர்

உபதலைவர்: ஏ.எஸ்.ஹாபி

உப செயலாளர்: ஏ.ஆர். அஸ்லம் சிஹான்

உபசெயலாளர் Welfare: பரீதா முஸ்தபா

கணக்குப் பரிசோதகர்: ஏ.எம்.நௌசாத்


நிருவாக உத்தியோகத்தர்கள்:

எம்.ஜி.றோஷன் : பொது நிர்வாகம்

எம்.எஸ்.எம்.பர்ஹான்: நிதி நிர்வாகம்

ஏ.எம்.ஆஸாத்: நூலகம்

ஆர்.பாத்திமா பர்வின் : கலை கலாச்சார பீடம்

எம்.எம்.சக்கி: வர்த்தக முகாமைத்துவ பீடம்

எஸ்.எம்.எஸ் பசீறா: இஸ்லாமிய மற்றும் அரபு பீடம்

எஸ். இன்பம் ஜெமீல்: பிரயோக விஞ்ஞான பீடம்

கே. றைஸுடீன் : பொறியியல் பீடம்

ஏ.எம்.நிஹாப் : தொழில்நுட்ப பீடம்


ஆலோசகர்கள்

எம்.எச்.எம்.ஹலீம்

எஸ்.எல்.ஏ.அஹத்

எஸ்.எம்.கலீல்

எம்.ஐ.ஏ.ஜலீல்

எம்.என்.முஸ்னி

பி.எம்.ஹிதாயத்துல்லா

நிசாயா எfப் அமீர்

ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :