நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் சமூக செயற்பாட்டாளரும், அரசியல் பிரமுகருமான கலாநிதி எம்.பீ.முஸம்மில் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடியேற்றி சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றதோடு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நான்கு மதத்தவர்களின் இறைவணக்கம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட நான்கு மதத்தினை சேர்ந்த சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கல்குடாத் தொகுதியிலுள்ள வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கும், மற்றும் மத தலைவர்களுக்கும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்; ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவாராஜா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டீ.டீ.நிலங்க, வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மதத் தலைவர்கள், பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment