சன்முகா வித்தியாலய விவகாரம். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் அதேவேளை, இரு சமூகமும் செய்ய வேண்டியது என்ன ?



முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-
ல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் பலதரப்பட்ட அரசியல் பிரச்சினைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் குறைவிருக்காது. இவ்வாறான பிரச்சினைகள் உலகம் அழியும் வரைக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நல்லிணக்கம், இன ஐக்கியம் என்று வாய் நிறைய இனிமையாக பேசுவதெல்லாம் ஏட்டுச்சுரக்காய் போன்றதே தவிர, அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதற்காக இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்காமல் இருக்க முடியாது.

இது எங்கள் நாடு என்று சிங்களவர்களும், வடகிழக்கு எங்கள் தாயகம் என்று தமிழர்களும் வரிந்துகட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில், முஸ்லிம் சமூகத்தினர் எந்தவித தூரநோக்குகளும் இல்லாமல் அற்ப அன்றாட சலுகைகளுக்காக சோரம் போன சமூகமாக பொறுப்பற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் சன்முகா வித்தியாலய விவகாரம் இன்று ஆரம்பமானதொன்றல்ல, 2017 நல்லாட்சி காலத்தில் அங்கு பிரச்சினை ஆரம்பித்தபோதே அதில் அரசியல் தலைமகள் தலையிட்டு நிரந்தர தீர்வுக்கு முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவாகவே இன்று மீண்டும் அந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிகார துஸ்பிரயோகம் செய்ததற்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அவருக்கு துணைபுரிந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக இடம் மாற்றம் செய்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்ட ஏராளமான சம்பவங்கள் எமது நாட்டில் நடைபெற்றுள்ளது.

அதுபோல் சன்முகா வித்தியாலயத்தில் பிரச்சினை ஆரம்பித்தபோதே அதில் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு ஏன் தீர்வினை காண்பதற்கு முயற்சிக்கவில்லை ?

சன்முகா வித்தியாலயம் மூலமாக சில தீய சக்திகளால் கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்துக்கு முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எல்லோர் மனங்களிலும் எழுகின்றதனை காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இருக்கின்ற தமிழ் பாடசாலைகளில் பணிபுரிகின்ற முஸ்லிம் ஆசிரியைகளும், முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரிகின்ற ஏனைய சமய ஆசிரியைகளும் தங்களது ஆடை விடையத்தில் சுதந்திரமாக செயல்படுகின்ற நிலையில், சன்முகா வித்தியாலயத்தில் மாத்திரம் இந்த நிலைமைக்கு காரணமென்ன ? அது இலங்கை என்ற இறமைக்கு அப்பால்பட்ட பிரதேசமா என்று எண்ணத் தோன்றுகின்றது.

1990 காலங்களில் தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசல் ஏற்பட்டபோதிலும் திருகோணமலை நகரத்தில் அவ்வாறான இன முரண்பாடுகள் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் நல்லுறவினை பேணிவருகின்ற காலகட்டத்தில் முஸ்லிம்களின் ஆடை சுதந்திரத்தில் குறித்த பாடசாலையில் மாத்திரம் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தூண்டியது எது ?

அதுமட்டுமல்லாமல் எதுவும் அறியாத அப்பாவி மாணவர்களை ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டியதன் மூலம் இவ்வாறன குறுகிய சிந்தனைகளை அவர்களது மனங்களில் விதைத்து எதிர்கால சமுதாயத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாகவே அவதானிக்க முடிகின்றது.

எனவே ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சிக்கும் தீய சக்திகளின் சதிவலையில் இரு சமூகத்தவர்களும் இலக்காகிவிடக்கூடாது என்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலாகும்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :